தேசிய செய்திகள்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் + "||" + arumugasamy enquiry commission seek permission to conduct inquiry to sasikala

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் சிறை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
சென்னை,

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது. சசிகலாவிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி, அவர் அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. விசாரணை தொடர்பாக தமிழக உள்துறைக்கும் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.