அருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி


அருண் ஜெட்லிக்கு எதிரான மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
x
தினத்தந்தி 7 Dec 2018 6:13 PM GMT (Updated: 7 Dec 2018 6:13 PM GMT)

நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிரான மனு மீதான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

புதுடில்லி,

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதி விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

முன்னதாக ரிசர்வ் வங்கியின் இருப்பில் உள்ள ரூ.9.59 லட்சம் கோடியில் இருந்து மூன்றில் ஒரு பங்கை, மத்திய அரசு கேட்பதாகவும், அந்தத் தொகையை வழங்க ரிசர்வ் வங்கி மறுப்பதால்தான் இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை வெடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இது தொடா்பாக அருண் ஜெட்லி தெரிவித்த கருத்துகளும், அதற்கு, ரிசர்வ் வங்கி துணை கவா்னா் ஆச்சாா்யா தெரிவித்த பதிலும் விவாதத்துக்கு உள்ளானது.

இந்நிலையில், இதனை மையமாக வைத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞா் எம்.எல்.சா்மா பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தாா்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரிக்க எந்த காரணமும் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தது. மேலும் இதே மனுதாரா் அடுத்து ஏதாவது பொதுநல வழக்குத் தொடர்ந்தால் அதற்கு முன்பு ரூ.50,000 அபராதம் கட்ட வேண்டும். அவ்வாறு கட்டவில்லை என்றால் அவா் இனி பொதுநல வழக்குத் தொடுக்க முடியாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

Next Story