தேசிய செய்திகள்

காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி + "||" + At least 11 killed as bus falls into gorge in Jammu and Kashmir's Poonch

காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி

காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி
காஷ்மீர் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்திலிருந்து லோரன் என்ற பகுதியை நோக்கி பேருந்து  ஒன்று சென்று கொண்டிருந்தது. மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து,  வழியில், ப்ளேரா என்ற இடத்தில், சாலையில் இருந்து விலகி, பெரிய பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில்  11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.  காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் பலரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீர்: பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொலை
காஷ்மீரில், பயங்கரவாதிகளால் 4 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
காஷ்மீரில் உள்ள பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்த கோர விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
3. காஷ்மீரில் கடும் குளிர் - தால் ஏரி உறைந்தது
காஷ்மீரில் கடும் குளிர் காரணமாக தால் ஏரி உறைந்தது.
4. காஷ்மீரில் மரணம்: 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரரின் உடல் அடக்கம்
காஷ்மீரில் மரணமடைந்த திருமங்கலத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடல், அவரது சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
5. காஷ்மீரின் அடுத்த முதல்–மந்திரி பா.ஜனதாவை சேர்ந்தவராக இருப்பார் - மாநில தலைவர் தகவல்
காஷ்மீரின் அடுத்த முதல்–மந்திரி பா.ஜனதாவை சேர்ந்தவராக இருப்பார் என மாநில தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.