தேசிய செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர்கள் பதிலடி + "||" + Pakistani military on the Kashmir border has been blamed - Indian soldiers have been reprimanded

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர்கள் பதிலடி

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் - இந்திய வீரர்கள் பதிலடி
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
ஜம்மு,

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறிய தாக்குதல்களை நிகழ்த்தி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 6-ந் தேதி கூட பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய கொடூர தாக்குதலில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.


பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அத்துமீறிய தாக்குதல் நேற்றும் தொடர்ந்தது. அங்குள்ள ரஜோரி மாவட்டத்தின் எல்லையோர பகுதிகளில் அந்த நாட்டு வீரர்கள் கண்மூடித்தனமான தாக்குதல்களை அரங்கேற்றினர். இதனால் எல்லையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தானின் இத்தகைய அத்துமீறல்களுக்கு இந்திய வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர். இதனால் அங்கு இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை மூண்டது. இதில் உயிர்ச்சேதம் எதுவும் நிகழ்ந்ததாக தகவல் இல்லை.

அங்கு தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. பாகிஸ்தான் ராணுவத்தின் இத்தகைய அத்துமீறிய தாக்குதல்களால் எல்லையோர கிராமங்களில் அதிர்ச்சியும், பதற்றமும் நீடித்து வருகிறது.தொடர்புடைய செய்திகள்

1. இந்திய எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல்
இந்திய எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் பீரங்கி தாக்குதல் நடத்தியது.
2. எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது.
3. காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலி
காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் சுட்டதில் மேலும் ஒரு இந்திய வீரர் பலியானார்.
4. காஷ்மீர் எல்லை: பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.