தேசிய செய்திகள்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு + "||" + Cauvery Management Authority To appoint a permanent leader Tamil Nadu Government case

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு
நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும்
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு
காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவர் பாரபட்சமாக செயல்படுவதாகவும், எனவே நிரந்தர தலைவரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது.
புதுடெல்லி,

காவிரி நதி நீரை பங்கீடு செய்து கொள்வதற்காக புதிய செயல் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

காவிரி மேலாண்மை ஆணையம்

அதை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அமைத்த மத்திய அரசு, புதிய வரைவு செயல் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதை தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் ஏற்றுக்கொண்டன.

காவிரி மேலாண்மை ஆணைய அலுவலகம் டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்று குழுவின் அலுவலகம் பெங்களூருவிலும் செயல்பட்டு வருகின்றன.

தலைவர் மசூத் உசேன்

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைவர் மசூத் உசேன் உள்ளார்.

காவிரி ஆற்றில் எந்த மாநிலமும், சம்பந்தப்பட்ட பிற மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் எந்த திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறி உள்ளது. ஆனால் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட முயன்று வருகிறது.

ஒப்புதல்

இது தொடர்பாக கர்நாடகம் தாக்கல் செய்த சாத்தியக்கூறு அறிக்கைக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்த மத்திய நீர்வள ஆணையம், விரிவான திட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கர்நாடக நீர்ப் பாசன துறையை கேட்டுக்கொண்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, மேகதாது அணை கட்டும் திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது. மேலும் மத்திய அரசு மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கும் தொடர்ந்து இருக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து இருக்கிறது. இது தொடர்பான மனுவை தமிழக அரசின் சார்பில் வக்கீல் ஜி.உமாபதி நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய நீர்வள ஆணையத்துக்கும், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கும் ஒரே தலைவராக மசூத் உசேன் உள்ளார். இதனால் அவரால் தனித்துவமாக செயல்பட முடியவில்லை.

நிரந்தர தலைவர்

காவிரியில் மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் முதற்கட்ட ஆய்வறிக்கைக்கு அவர் அனுமதி அளித்து உள்ளார். இது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிரானது. அவர் பாரபட்சமாக செயல்படுகிறார். அவரால் நடுநிலையாக செயல்பட முடியாது. எனவே காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தனியாக முழுநேர தலைவரை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கினால் மட்டுமே மேகதாது அணை கட்டமுடியும்-ஆணைய தலைவர் மசூத் உசேன்
காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கினால் தான் மேகதாது அணை கட்டமுடியும் என காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறினார்.
2. மேகதாது அணை பிரச்சினைக்கு மத்தியில் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் துவங்கியது
மேகதாது அணை பிரச்சினைக்கு மத்தியில் காவிரி மேலாண்மை ஆணையம் துவங்கி நடைபெற்று வருகிறது.
3. மேகதாது அணை பிரச்சினைக்கு மத்தியில் காவிரி மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது
மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) காவிரி மேலாண்மை ஆணையம் கூடுகிறது.
4. காவிரி மேலாண்மை ஆணையம்: மேட்டூர் அணை பூங்காவில் ரூ.1¼ கோடியில் நினைவுத்தூண்
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட வெற்றியை நினைவு கூரும் வகையில் மேட்டூர் அணை பூங்காவில் ரூ.1¼ கோடியில் நினைவுத்தூண் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
5. காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் குமாரசாமி டெல்லியில் இன்று ஆலோசனை
காவிரி மேலாண்மை ஆணையம் குறித்து முதல்-மந்திரி குமாரசாமி, கர்நாடக எம்.பி.க்களுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்துகிறார். எம்.பி.க்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.