காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Dec 2018 3:57 AM GMT (Updated: 9 Dec 2018 3:57 AM GMT)

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.  தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் நேற்று சோனியா காந்தியை நேரில் சந்தித்து பேசினார்.

அவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  இதேபோன்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார்.  அவர் சோனியா காந்திக்கு நேரில் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை இன்று தெரிவிக்கிறார்.

இதேபோன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்குகிறார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் இன்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், திருமதி சோனியா காந்திஜிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.  அவர் நீண்டகாலம், ஆரோக்கியமான உடல்நலத்துடன் வாழ இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Next Story