டெல்லியில் சோனியா காந்தியுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு


டெல்லியில் சோனியா காந்தியுடன் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 9 Dec 2018 7:05 AM GMT (Updated: 9 Dec 2018 7:05 AM GMT)

டெல்லியில் சோனியா காந்தியை தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.  இந்நிலையில், டெல்லி சென்றுள்ள தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், சோனியா காந்தியை இன்று நேரில் சந்தித்து பேசினார்.

பின்னர் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  இதேபோன்று, அண்ணா அறிவாலயத்தில் வருகிற டிசம்பர் 16ல் நடைபெறும் முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்.

இந்த சந்திப்பில் ஸ்டாலினுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தி.மு.க.வின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும் உடன் இருந்தனர்.

Next Story