தேசிய செய்திகள்

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் பலி + "||" + 3 militants killed outside Srinagar

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் பலி

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் முஜ்கண்ட் பகுதியில் பந்திப்போரா சாலை அருகே பாதுகாப்பு படையினர் தீவிரவாத தேடுதல் வேட்டையில் நேற்று மாலை ஈடுபட்டனர்.  இதனை அடுத்து நகரில் மொபைல் இணையதள சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், அவர்களை நோக்கி பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்.  இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர்.  நேற்றிரவு தாக்குதல் நிறுத்தப்பட்டாலும், தீவிரவாதிகள் தப்பியோடாமல் இருக்க அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதன்பின்னர் இன்று காலை தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அவர்களின் அடையாளம் மற்றும் அவர்கள் சார்ந்த குழு பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.  அந்த பகுதியில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
2. காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி பலி
காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
3. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு; பயங்கரவாதி உள்பட 2 பேர் பலி
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் நகரில் பாதுகாப்பு படையினருடனான மோதலில் பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டான்.
4. காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.
5. ஆப்கானிஸ்தானில் ராணுவ வேட்டை; 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் பலி
ஆப்கானிஸ்தானில் 2 தலீபான் தலைவர்கள் உள்பட 52 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.