தேசிய செய்திகள்

மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு, இந்திய விசாரணை முகமைகள் லண்டன் புறப்பட்டது + "||" + CBI, ED team has left for UK for court proceedings there on India s request seeking extradition of Vijay Mallya

மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு, இந்திய விசாரணை முகமைகள் லண்டன் புறப்பட்டது

மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு, இந்திய விசாரணை முகமைகள் லண்டன் புறப்பட்டது
மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் இந்திய விசாரணை முகமைகள் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளது.
புதுடெல்லி,

இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில்  நடைபெற்று வருகிறது. விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்புவது குறித்தான இவ்வழக்கில் இறுதி தீர்ப்பை நாளை நீதிமன்றம் வழங்குகிறது.

இதற்கிடையே வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய தொகை முழுவதும் தந்து விடுவதாகவும், தயவு செய்து வங்கிகள் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விஜய் மல்லையா கோரிக்கை விடுத்தார். நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் இந்திய விசாரணை முகமைகள் லண்டன் புறப்பட்டுச் சென்றுள்ளது. சிபிஐ இணை இயக்குநர் சாய் மனோகர் தலைமையில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அடங்கிய குழு லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளது என்று தெரிய வந்துள்ளது.