தேசிய செய்திகள்

டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை + "||" + BJP, Samajwadi Party Spokespersons Fight During Live Debate At Zee TV Studio, One Detained

டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை

டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை
டிவி விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் இடையே கைகலப்பு நேரிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுடெல்லி, 

புதுடெல்லி அருகே நொய்டாவில் உள்ள ஒரு தனியார் டெலிவி‌ஷன் நிறுவனத்தில் நடைபெற்ற நேரடி விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனுராக் படோரியா, பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா ஆகியோர் கலந்து கொண்டனர். விவாதத்தின் போது ஆவேசமாக பேசிய அவர்கள் இருவரும் திடீரென்று கைகலப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து பின்னர் கவுரவ் பாட்டியா அங்குள்ள போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சமாஜ்வாடி செய்தித் தொடர்பாளர் அனுராக் படோரியாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். 

விவாத நிகழ்ச்சி தொடர்பான வீடியோ காட்சிகளை வழங்குமாறு அந்த டி.வி. நிறுவனத்தை போலீசார் கேட்டுக் கொண்டு உள்ளனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும், போலீஸ் நிலையத்தின் முன்பு ஏராளமான சமாஜ்வாடி கட்சியினர் திரண்டனர். அனுராக் படோரியாவை பாரதீய ஜனதா செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா தாக்கியதாக சமாஜ்வாடி எம்.பி. சுரேந்திர சிங் நாகர் குற்றம்சாட்டினார். 

இரு அரசியல் கட்சி தலைவர்களும் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோவின் சிறிய காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் அமமுகவினர் தாக்கியதில் பா.ஜனதாவினர் காயம்
கன்னியாகுமரியில் அமமுகவினர் நடத்திய தாக்குதலில் பா.ஜனதாவை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்தனர்.
2. ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் -தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை
ராகுல் காந்தி பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
3. வாக்காளர்களை 2 முறை ஓட்டுப்போட கூறிய பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. மீது வழக்கு
வாக்காளர்களை 2 முறை ஓட்டுப்போட கூறிய பா.ஜனதா பெண் எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
4. ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் - 22ந் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு
ரபேல் விவகாரத்தில் பா.ஜனதா தொடர்ந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் அடிப்படையில் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 22-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு கூறியுள்ளது.
5. தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினருடன் மோதல்: காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா போலீஸ் பாதுகாப்பு கேட்டார்
தேர்தல் பிரசாரத்தில் பா.ஜனதாவினருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, காங்கிரஸ் வேட்பாளர் நடிகை ஊர்மிளா போலீஸ் பாதுகாப்பு கேட்டார்.