தேசிய செய்திகள்

திமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது; டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார் + "||" + DMK MP Kanimozhi gets the best woman parliamentar DMK MP Kanimozhi gets the best woman parliamentarian award for 2018

திமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது; டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்

திமுக எம்.பி. கனிமொழிக்கு சிறந்த பெண் எம்.பி. விருது; டெல்லியில் 13-ம் தேதி துணை ஜனாதிபதி வழங்குகிறார்
2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.
பிரபல செய்தி நிறுவனமான லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், நாடாளுமன்ற விருதுகள் 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. வரும் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதுகளை வழங்க உள்ளார். 2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு வழங்கப்படுகிறது. 

''நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி மகத்தான பங்காற்றியுள்ளார். ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு  2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண்  உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனிமொழியின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கு ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உந்து சக்தியாகவும் திகழ்வதாக தெரிவித்துள்ளது. இந்த விருதுகளை 10 பேர் கொண்ட மூத்த நாடாளுமன்ற குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக் கொண்ட இந்த குழுவில், டாக்டர் பரூக் அப்துல்லா, பேராசிரியர் சவுகதா ராய், பிரபுல் பட்டேல், டி ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மால்ட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். விருது வென்றுள்ள மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழிக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தோல்வி பயத்தாலே வருமான வரித்துறை ஏவப்படுகிறது -கனிமொழி குற்றச்சாட்டு
தோல்வி பயம் காரணமாகவே வருமான வரித்துறை ஏவப்படுகிறது என கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
2. நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல; மண்ணின் மகள்: கனிமொழிக்கு தமிழிசை பதிலடி
நான் இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர் அல்ல என்றும் இந்த மண்ணின் மகள் என்றும் கனிமொழிக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
3. இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாளர்கள் என கூறிக்கொண்டு கனிமொழி, திருமாவளவன் ராஜபக்சேவிடம் பரிசு பெற்று வந்தார்கள் தேர்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தாக்கு
இலங்கை தமிழ் மக்களுக்கு ஆதரவாளர்கள் என கூறிக்கொண்டு கனிமொழி, திருமாவளவன் ஆகியோர் ராஜபக்சேவிடம் பரிசு பெற்று வந்தார்கள் என்றும், அதனை மக்கள் மறக்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
4. தூத்துக்குடியில் பிரசார பொதுக்கூட்டம் “துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றிபெற செய்யுங்கள்” - வைகோ பேச்சு
“துன்பப்படும் மக்களின் துயர் துடைக்க கனிமொழியை வெற்றி பெற செய்யுங்கள்” என்று தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ பேசினார்.
5. கனிமொழி எம்.பி. இன்று தூத்துக்குடி வருகை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. இன்று தூத்துக்குடி வருகிறார்.