கேரளா: 4-வது சர்வதேச விமான நிலையம் கண்ணூரில் இன்று திறப்பு


கேரளா: 4-வது சர்வதேச விமான நிலையம் கண்ணூரில் இன்று திறப்பு
x
தினத்தந்தி 9 Dec 2018 5:48 PM GMT (Updated: 9 Dec 2018 5:48 PM GMT)

கேரள மாநிலம் கண்ணூரில் 4-வது புதிய சர்வதேச விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது.

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூரில் சர்வதேச விமான நிலையத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் மற்றும் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

கேரள மாநிலத்தில் ஏற்கனவே கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் கண்ணூர் மாவட்டத்தில்  2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரூ.1800 கோடி மதிப்பிலான செலவில் கட்டப்பட்ட 4-வது சர்வதேச விமான நிலையம்  இன்று திறக்கப்பட்டது.

மத்திய மந்திரி சுரேஷ் பிரபு, கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி விமான நிலைய பயன்பாட்டை தொடங்கி வைத்தனர். பின்னர் அபுதாபிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்ட முதல் விமானத்தை சுரேஷ் பிரபுவும், பினராயி விஜயனும் கொடி அசைத்து அனுப்பி வைத்தனர்.

கண்ணூர் விமானநிலையம் ஆண்டுக்கு 15 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த திறப்பு விழாவில், தொழில்துறை அமைச்சர் ஜெயராஜன், கண்ணூர் சர்வதேச விமான நிலையம் மேலாண்மை இயக்குநர் துளசிதாஸ், அமைச்சர்கள் ராமச்சந்திரன் கடன்னப்பள்ளி, சந்திரசேகரன், ஷைலஜா, சசீந்திரன் மற்றும் எம்பிக்கள் ஸ்ரீமதி, ராகேஷ் ஆகியோரும் பங்கேற்றனர்.


Next Story