தேசிய செய்திகள்

72-வது பிறந்த நாள்: சோனியாவுக்கு மோடி வாழ்த்து + "||" + 72rd birthday: Modi congratulates Sonia Gandhi

72-வது பிறந்த நாள்: சோனியாவுக்கு மோடி வாழ்த்து

72-வது பிறந்த நாள்: சோனியாவுக்கு மோடி வாழ்த்து
72-வது பிறந்த நாளை கொண்டாடிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி,

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி 1946-ம் ஆண்டு, டிசம்பர் 9-ந் தேதி இத்தாலியில் பிறந்தவர். அவர் தனது 72-வது பிறந்த நாளை டெல்லியில் நேற்று சிறப்பாக கொண்டாடினார்.


அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “திருமதி சோனியா காந்திக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியும் சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடி - இம்ரான் கான் சந்திப்பு, பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு இடையே, மோடி - இம்ரான் கான் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன.
2. டெல்லியில் மோடியுடன் கிரண் பெடி சந்திப்பு
டெல்லியில் பிரதமர் மோடியை, கிரண் பெடி சந்தித்தார்.
3. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு
பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
4. நாளை குஜராத் செல்ல இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்
நாளை மாலை குஜராத் சென்று தனது தாயாரிடம் ஆசி பெற இருப்பதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
5. பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
பாரதீய ஜனதா கூட்டணி-349; காங். கூட்டணி-96; இதர கட்சிகள்-97. நாடாளுமன்ற தேர்தலில் 302 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, மத்தியில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கிறார்.