தேசிய செய்திகள்

மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு + "||" + Woman locked inside home by son, dies of hunger: police

மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு

மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட 80 வயது தாய் பசியால் உயிரிழப்பு
உத்தரபிரதேசத்தில் மகனால் வீட்டுக்குள் வைத்து பூட்டப்பட்ட தாய் பசியால் உயிரிழந்து உள்ளார்.
ஷாஜகான்பூர்,

உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரில் ஆலம்பாக் பகுதியை சேர்ந்தவர் சலீல் சவுத்ரி. ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றிய இவருக்கு ரெயில்வே நிர்வாகம் வீடு ஒதுக்கி தந்துள்ளது.

இந்த நிலையில், அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.  இதுபற்றி போலீசில் அக்கம்பக்கத்தினர் புகார் தெரிவித்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து சவுத்ரியின் பூட்டிய வீட்டிற்குள் சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  அங்கு அவரது 80 வயது தாயார் உயிரிழந்து கிடந்துள்ளார்.  அவர் பசியால் மரணம் அடைந்து இருக்க கூடும் என போலீசார் கூறினர்.

இந்த சம்பவத்திற்கு பின் சவுத்ரியை காணவில்லை.  அவர் பணிக்கு வராமல் இருந்ததற்காக 2 முறை சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார்.  கடந்த 2 மாதங்களாக அவர் பணியில் இல்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கணவரை பிரிந்து வந்த ஏக்கத்தில் மகனுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்து விட்டு பெண் தற்கொலை - திருப்பூரில் பரிதாபம்
கணவரை விட்டு பிரிந்து வந்த ஏக்கத்தில் மகனுக்கு அரளி விதையை அரைத்து கொடுத்துவிட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
2. பரங்கிப்பேட்டை அருகே விபரீதம்: வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய்- குழந்தை சாவு - சப்-கலெக்டர் விசாரணை
பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய், குழந்தை உயிரிழந்தனர். இதுதொடர்பாக சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
3. பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம்: தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை நெல்லையை சேர்ந்தவர்கள்
பங்கு சந்தை முதலீட்டில் நஷ்டம் ஏற்பட்டதால் கடன் தொல்லையால் விரக்தி அடைந்த நெல்லையை சேர்ந்த வாலிபர், தனது தாயுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. சேத்தியாத்தோப்பு அருகே: பிரசவத்தில் தாய்-குழந்தை பலி - ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
சேத்தியாத்தோப்பு அருகே பிரசவத்தின் போது தாய், குழந்தை பலியாகினர். இதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததே காரணம் என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. கோவண்டி அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி சாவு
கோவண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்த தாய், மகன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.