ராஜஸ்தானில் காங்கிரஸ் 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை


ராஜஸ்தானில் காங்கிரஸ் 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை
x
தினத்தந்தி 11 Dec 2018 3:58 AM GMT (Updated: 11 Dec 2018 4:13 AM GMT)

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 7, பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெய்பூர்,

ராஜஸ்தானில் மொத்தமுள்ள 200 சட்டசபை தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி ஓட்டு பதிவு நடந்து முடிந்தது.  இதில் 74.21 சதவீத வாக்குகள் பதிவாகின.  ஆல்வாரின் ராம்கார் தொகுதியில் லட்சுமண சிங் என்ற வேட்பாளர் மரணம் அடைந்த நிலையில் அந்த ஒரு தொகுதிக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.  இங்கு ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருந்து வருகிறது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 7 இடங்களில், பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  டோங்க் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சச்சின் பைலட் முன்னிலை வகித்து வருகிறார்.  அவரது வீடு முன் தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.

சட்டீஸ்காரில் ராஜ்நந்த்காவன் தொகுதியில் போட்டியிட்ட முதல் மந்திரி ராமன் சிங் பின்னடைவை சந்தித்துள்ளார்.  அந்த தொகுதிக்கான காங்கிரஸ்  வேட்பாளர் கருணா சுக்லா முன்னிலையில் உள்ளார்.

Next Story