ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அக்பருதீன் ஓவைசி சந்திரயான் கட்டா தொகுதியில் வெற்றி


ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அக்பருதீன் ஓவைசி சந்திரயான் கட்டா தொகுதியில் வெற்றி
x
தினத்தந்தி 11 Dec 2018 5:00 AM GMT (Updated: 11 Dec 2018 5:00 AM GMT)

தெலுங்கானாவில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அக்பருதீன் ஓவைசி சந்திரயான் கட்டா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் கடந்த 7-ந்தேதி நடந்து முடிந்தது.  இதற்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

இந்த தேர்தலில் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மற்றும் பா.ஜ.க. தனியே போட்டியிட்டது.  காங்கிரஸ் கட்சியானது தெலுங்கு தேசம் மற்றும் தெலுங்கானா ஜன சமிதி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது.

இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் சித்திப்பேட்டை தொகுதியில் பவானி ரெட்டியை விட 13 ஆயிரத்து 40 ஓட்டுகள் முன்னிலை (3-வது சுற்று) வகிக்கிறார்.

இதேபோன்று ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அக்பருதீன் ஓவைசி சந்திரயான் கட்டா தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

Next Story