இளம்பெண் கற்பழிப்பு: காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்; 3 போலீசார் பணியிடை நீக்கம்


இளம்பெண் கற்பழிப்பு: காவலில் இருந்த கைதி தப்பியோட்டம்; 3 போலீசார் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 11 Dec 2018 5:22 AM GMT (Updated: 11 Dec 2018 5:22 AM GMT)

கோவாவில் கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர் போலீசார் காவலில் இருந்து தப்பிய நிலையில் 3 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

பனாஜி,

தெற்கு கோவாவின் பீச்சில் கடந்த மே 24-ந் தேதி 20 வயது இளம்பெண் ஒருவர் 3 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார்.  அவரிடம் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த வழக்கில் மத்திய பிரதேசத்தின் இந்தூரை சேர்ந்த ஈஷ்வர் மக்வானா (வயது 24) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். அவருடன் மற்ற 2 கூட்டாளிகளான ராம் பாரியா மற்றும் சஞ்சீவ் பால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் 3 பேரும் வடக்கு கோவாவில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களில் மக்வானா மீது தம்பதி கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன.  போலீசாரின் காவலில் இருந்து வந்த மக்வானா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் தப்பி சென்றான்.

இதனை அடுத்து தலைமை கான்ஸ்டபிள் ராஜேந்திர தம்ஷி மற்றும் கான்ஸ்டபிள்கள் லாடு ராவுல் மற்றும் சஞ்சய் காண்டீபர்கர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.  மக்வானா பற்றிய தகவல் அளிப்போருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

Next Story