ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி


ராஜஸ்தானில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ்; மிசோரமில் ஆட்சியை இழக்கிறது; மத்திய பிரதேசத்தில் இழுபறி
x
தினத்தந்தி 11 Dec 2018 7:44 AM GMT (Updated: 11 Dec 2018 7:55 AM GMT)

ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் பாஜக பெற்றதில் பாதி இடங்களை கூட இம்முறை எட்டவில்லை என்பது அக்கட்சிக்கு பேரதிர்ச்சியாகும்.

ஜெய்ப்பூர்

ராஜஸ்தானில் கடந்த தேர்தலில் பாஜக பெற்றதில் பாதி இடங்களை கூட இம்முறை எட்டவில்லை என்பது அக்கட்சிக்கு பேரதிர்ச்சியாகும்.

ராஜஸ்தானில் மொத்த சட்டசபை தொகுதிகள் 200. பெரும்பான்மைக்கு 101 தொகுதிகள் போதுமானது. ஆனால், கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற, சட்டசபை தேர்தலில், பாஜக இங்கு, 163 தொகுதிகளில் அபாரமாக வெற்றி பெற்றது. அதாவது சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகுதிகளில் பாஜகதான் வென்றது.

காங்கிரஸ் கட்சி, 21 தொகுதிகளை வென்றது. மற்றவர்கள் 16 தொகுதிகளை கைப்பற்றினர். இம்முறை மதியம் 12 மணி நிலவரப்படி, ராஜஸ்தானில் பாஜக 76 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் முன்னிலை வகித்தது.

இதன் மூலம், கடந்த தேர்தலைவிடவும் பாதிக்கும் குறைவான இடங்களைத்தான் பாஜக பெறப்போகிறது என்பது உறுதியாகியுள்ளது. 

அதேநேரம், காங்கிரசுக்கு சுமார் 5 மடங்கு வளர்ச்சியாகும். கடந்த தேர்தலில் பாஜக பெற்றதை போன்ற பிரமாண்ட வெற்றியை பெற முடியவில்லை என்றபோதிலும், கடந்த தேர்தலில் காங்கிரஸ் நிலைமையை விட இம்முறை மேம்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான மிசோ தேசிய முன்னணி 40 தொகுதிகளிலும் போட்டியிட்டன. பா.ஜனதா 39 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இந்த தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் பதிவான வாக்குகள் 13 மையங்களில் இன்று எண்ணப்படுகின்றன. மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் நம்பிக்கையில் காத்திருந்த காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஆட்சியமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 12 மணி நிலவரப்படி மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) கட்சி 28 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து தொண்டர்கள் கட்சி அலுவலகங்களில் இனிப்புகள் கொடுத்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

ஆளும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் வேட்பாளர்கள் பலர் தோல்வி முகத்தில் உள்ளனர். முதல்வர் லால் தன்ஹாவ்லா சாம்பாய் தெற்கு தொகுதியில் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்என்எப் வேட்பாளர் லால்நந்த் லுவாங்கா வெற்றி பெற்றார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 2003-ம் ஆண்டில் இருந்தே ஆட்சியில் இல்லை.

கடைசியாக அங்கு திக் விஜய் சிங் காங்கிரஸ் சார்பாக பலமான முதல்வராக இருந்தார். அதன்பின் உமா பாரதி தொடங்கி இப்போது சிவராஜ் சிங் சவுகான் வரை 15 வருடம் அங்கு பாஜக கட்சிதான் ஆட்சி செய்து வருகிறது. இதனால் பாஜக ஆட்சியை இந்த தேர்தலில் அகற்ற காங்கிரஸ் தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது.

பாஜக: 103 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ் : 116 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

மத்திய பிரதேசத்தில் மொத்தம் 230 தொகுதிகள் உள்ளது. மெஜாரிட்டி பெற 116 தொகுதிகள் தேவை.

மாநிலம்

பாரதீயஜனதா

காங்கிரஸ்

மற்றவர்கள்

மத்திய பிரதேசம்

109

108

13

ராஜஸ்தான்

80

95

24

சத்தீஷ்கார்

21

59

10

தெலுங்கானா

2

21

         90(ரா.ச)

மிசோரம்

1

6

  27 (மி.தே.மு)




Next Story