தேசிய செய்திகள்

மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார் + "||" + Mahagathbandhan has failed terribly in Telangana Rajnath Singh

மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்

மெகா கூட்டணி தோல்வியை தழுவியது -ராஜ்நாத் சிங் சொல்கிறார்
தெலுங்கானாவில் மெகா கூட்டணி தோல்வியை தழுவியது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது. பா.ஜனதாவின் கோட்டையாக விளங்கிய மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் மூன்றாவது கட்சிக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானில் பா.ஜனதாவை விட்டு ஆட்சி காங்கிரஸ் வசம் செல்கிறது. மற்றொரு பா.ஜனதா ஆளும் மாநிலமான சத்திஷ்காரிலும் பா.ஜனதாவிற்கு பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகிவரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கருத்து கேட்கப்பட்டது.

ராஜ்நாத் சிங் பேசுகையில், “இப்போது வரையில் தெளிவான நிலவரம் தெரியவரவில்லை.  வெற்றியடைந்துவரும்  எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஆனால் தெலுங்கானாவில் மெகா கூட்டணி படுதோல்வியை தழுவியுள்ளது, என தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரையில் ஆளும் கட்சியாக இருந்த தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி சட்டசபையின் ஆய்வு காலம் இருந்தபோதே, சபையை கலைத்து தேர்தலை எதிர்க்கொண்டது.  தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு எதிராக காங்கிரஸ், தெலுங்குதேசம் மற்றும் பிற கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்தது.  பா.ஜனதா தனியாக போட்டியிட்டது. தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி எதிர்பார்க்காத வகையில் அதிகமான தொகுதிகளில் முன்னிலையை பெற்றுள்ளது.

தெலுங்கானாவில் உள்ள மொத்தம் 119 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 87 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளிலும் பா.ஜனதா 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. பா.ஜனதாவின் ரூ.8 கோடியை பறிமுதல் செய்தது தெலுங்கானா போலீஸ்
தெலுங்கானா பா.ஜனதாவின் 8 கோடி ரூபாயை அம்மாநில போலீஸ் பறிமுதல் செய்துள்ளது.
2. பெரும்பாலான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சந்திரசேகர் ராவ் கட்சிக்கு செல்ல திட்டம்?
தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 19 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில் பலர் கட்சித்தலைமை மீது அதிருப்தியில் உள்ளனர்
3. சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் -சந்திரபாபு நாயுடு
சந்திரசேகர ராவின் மூன்றாவது கூட்டணிக்கு பின்னால் பிரதமர் மோடியின் தந்திரம் உள்ளது என சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
4. ராஜஸ்தான், தெலுங்கானாவில் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: 7-ந்தேதி வாக்குப் பதிவு
ராஜஸ்தான் (200 தொகுதிகள்) மற்றும் தெலுங்கானா(119 தொகுதிகள்) ஆகிய 2 மாநிலங்களில் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது.
5. சட்டசபைத்தேர்தல்: தெலுங்கானாவில் இதுவரை ரூ.99.5 கோடி பறிமுதல்
சட்டசபைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தெலுங்கானாவில் இதுவரை ரூ.99.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.