தேசிய செய்திகள்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + Telangana Assembly Election Results 2018 Live: Caretaker CM KCR wins from Gajewal constituency

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கஜ்வெல் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஐதராபாத்

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சட்டசபை தேர்தலில் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. மத்தியபிரதேசத்தில்  காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தென் இந்தியாவை பொருத்தவரை 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கான ராஷ்டீரிய சமிதி கட்சி அதிக இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது.  இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சி உள்ளது. 

119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலவரப்படி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 85 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
 
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்தில், மீண்டும் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கஜ்வெல் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார்.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி முன்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவர் - காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்
தெலுங்கானாவில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
2. கல்லூரி முன்பு மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவர் - காதலிக்க மறுத்ததால் ஆத்திரம்
தெலுங்கானாவில் காதலிக்க மறுத்ததால் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.
3. தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைத்த சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்பு?
தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைத்துள்ள சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்றுக் கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே வந்த கார் ; பெரிய விபத்து தவிர்ப்பு
ஐதராபாத்தில் விமானம் புறப்படப்போகும் கடைசி நொடியில் குறுக்கே கார் ஒன்று வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.