தேசிய செய்திகள்

பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம் + "||" + BJP s victory chariot halted Ally Senas first comment on poll trends

பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம்

பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது சிவசேனா விமர்சனம்
மத்தியிலும், மராட்டியத்திலும் பா.ஜனதாவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ள சிவசேனா கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
பா.ஜனதா ஆட்சி செய்த ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்காரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. பா.ஜனதா கோட்டையான மத்திய பிரதேசத்தில் கடுமையான போட்டி நிலவுகிறது.  பா.ஜனதா கூட்டணி கட்சியை மதிப்பது கிடையாது என சிவசேனா ஏற்கனவே விமர்சனம் செய்து வருகிறது. இப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் சிவசேனா தன்னுடைய விமர்சனத்தை முன்வைத்துள்ளது. “பா.ஜனதாவின் வெற்றித்தேர் இப்போது நிறுத்தப்பட்டுவிட்டது,” என சிவசேனா கூறியுள்ளது.

2019 பாராளுமன்றத் தேர்தலை நோக்கிய நிலையில் முக்கிய தேர்தல்களாக கருதப்பட்ட 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு பின்னடைவு என்பதை காட்டுகிறது.

சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவத் பேசுகையில், “இப்போதைய தேர்தல் நிலவரம் பா.ஜனதாவின் வெற்றித்தேர் நிறுத்தப்பட்டது என்பதை காட்டுகிறது. இது மிகவும் தெளிவான செய்தியாகும். ஆய்வு செய்யப்படவேண்டிய நேரமாகும்,” என கூறியுள்ளார். 

2014 பாராளுமன்றத் தேர்தலில் இருந்து இந்தியாவில் நடைபெற்ற பெரும்பாலான தேர்தல்களில் பா.ஜனதா வெற்றியையே தனதாக்கியது. பஞ்சாப்பில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கர்நாடகாவில் பா.ஜனதாவால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

1. வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது
கோவாவில் வேலைவாய்ப்பு குறைவு காரணமாக பா.ஜனதா அமைச்சரிடம் கேள்வி எழுப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2. காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்தார்
காங்கிரசிலிருந்து விலகிய பிரியங்கா சதூர்வேதி சிவசேனாவில் இணைந்துள்ளார்.
3. பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது ஷூ வீச்சு
பா.ஜனதா தலைவர் செய்தியாளர் சந்திப்பின் போது அவர் மீது ஷூ வீசப்பட்டது.
4. முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா
பா.ஜனதா வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது.
5. "பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்" பா.ஜனதாவின் அறிக்கையை கிண்டல் செய்யும் அரசியல் கட்சிகள்
"பெண்களுக்கு எதிராக குற்றம் இழைக்கப்படும்" என பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.