தேசிய செய்திகள்

சத்தீஷ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பறி கொடுக்கும் பா.ஜனதா + "||" + Election Result 2018 Congress Set To Sweep Chhattisgarh

சத்தீஷ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பறி கொடுக்கும் பா.ஜனதா

சத்தீஷ்கரில் 15 ஆண்டுகளுக்கு பிறகு  ஆட்சியை பறி கொடுக்கும் பா.ஜனதா
15 ஆண்டுகளுக்கு பிறகு சத்தீஷ்கரில் பாரதீய ஜனதா ஆட்சியை பறிகொடுக்கிறது.
ராய்பூர்,  

90 இடங்களை கொண்ட சத்தீஷ்கர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 12 மற்றும் 20-ந்தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.   இன்று  வாக்கு எண்ணிக்கை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.  வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சியே தொடர்ச்சியாக முன்னிலைப் பெற்று வருகிறது. பா.ஜனதா எட்டமுடியாத அளவு அதிகமான தொகுதியில் முன்னிலை பெற்றுள்ள காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சியமைக்க உள்ளது என்பதையே நிலவரம் காட்டுகிறது.

66 தொகுதிகள்

90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கரில் ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கை 46 ஆகும். ஆனால் காங்கிரஸ் அதைவிட 20 தொகுதிகளில் கூடுதலாக முன்னிலையை பெற்றுள்ளது. காங்கிரஸ் 66 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

பா.ஜனதாவின் நிலை மிகவும் மோசமானதாகியுள்ளது. அக்கட்சி 17 தொகுதிகளில் மட்டும் முன்னிலை பெற்றுள்ளது. 

பறிகொடுக்கும் பா.ஜனதா

மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து சத்தீஷ்கர் 2000–ம் ஆண்டில் பிரித்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது.   காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் ஜோகி முதல்வராக பதவி வகித்தார். 2003–ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியது. ராமன்சிங் முதல்–மந்திரி ஆனார். பின்னர்  2008, 2013  தேர்தல்களிலும் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியில் தொடர்ந்தது.  ராமன்சிங் தொடர்ந்து 3 முறை முதல்–மந்திரி பதவி வகித்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். 

இப்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பறிகொடுக்கிறது. ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று தீவிரம் காட்டிய காங்கிரசுக்கு சாதகமாக முடிவு அமைந்துள்ளது.  காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்து அஜித் ஜோகி தொடங்கிய ஜனதா காங்கிரஸ் , மாயாவதியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது. ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசுக்கு எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

தொடர்புடைய செய்திகள்

1. ‘ஒருங்கிணைந்த இந்தியா’ கூட்டம், பா.ஜனதாவின் எதிர்காலம் குறித்து மம்தாவின் கணிப்பு
கொல்கத்தாவில் நாளை மறுநாள் ‘ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறவுள்ளது.
2. அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் -பா.ஜனதா தகவல்
அமித் ஷா நலமாக உள்ளார், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என பா.ஜனதா தகவல் தெரிவித்துள்ளது.
3. ஆபரேஷன் தாமரை நடைபெறவில்லை : மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சி -பா.ஜனதா குற்றச்சாட்டு
ஆபரேஷன் தாமரை நடைபெறவில்லை என்றும், மக்களை திசை திருப்ப காங்கிரஸ் முயற்சிப்பதாகவும் பா.ஜனதா குற்றச்சாட்டு கூறியுள்ளது.
4. மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது - அமித்ஷா
மோடியை பிரதமர் பதவியிலிருந்து நீக்குவது சாத்தியமற்றது என அமித்ஷா கூறியுள்ளார்.
5. குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரம்: பா.ஜனதா மற்றொரு கூட்டணியை இழந்தது
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் பா.ஜனதாவுடன் நேரிட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாம் கனபரிசத் கூட்டணியை முறித்துக்கொண்டது.