மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு


மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு
x
தினத்தந்தி 12 Dec 2018 7:03 AM GMT (Updated: 12 Dec 2018 7:03 AM GMT)

மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் மேகதாது என்ற இடம் உள்ளது. “ஆடு தாண்டும் காவிரி” என்று குறிப்பிடும் அளவுக்கு இங்கு காவிரி ஆறு குறுகி ஓடுகிறது. இந்த இடம் கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூருவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இந்த இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அரசு முதல் கட்ட அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த அணை திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இதையொட்டி தமிழக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் இந்த அணை திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.  ஆனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துள்ளது.  மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்து உள்ளது.  இது குறித்து மத்திய அரசு, கர்நாடக அரசு 4 வாரத்தில் பதில் தரவேண்டும் என ஆணையிட்டு உள்ளது.

Next Story