தேசிய செய்திகள்

பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி + "||" + I have convened a meeting with CEOs & MDs of public sector banks tomorrow morning RBI Governor Shaktikanta Das

பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி

பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை -  சக்திகாந்த தாஸ் பேட்டி
பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும் என்று சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்ற பின் டெல்லியில் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும்.  விரைவில் தனியார் வங்கி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  நாளை மறுநாள் ரிசர்வ் வங்கி  அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

பணப்புழக்கம் குறித்து முதலீட்டாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆர்.பி.ஐ முக்கிய கவனம் செலுத்தும்.

நிதி கொள்கையில் அரசுடன் இணைந்து செயல்படுவோம். பொருளாதார முடிவுகளை எடுப்பதில் சிக்கலான காலகட்டத்தில் உள்ளோம். மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான முந்தைய விவகாரம் குறித்து கருத்து கூற முடியாது.

ஆர்.பி.ஐக்கு மத்திய அரசுடன் நெருக்கம் உள்ளதாக கூறப்படுவது பற்றி எனக்கு தெரியாது. பேச்சுவார்த்தை மூலமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.