தேசிய செய்திகள்

பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு + "||" + Govt fielding ally from TN to disrupt Parliament TMC

பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு
பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை பா.ஜனதா அரசு பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
புதுடெல்லி,

காவிரி விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக கடும் அமளியில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைக்க நேரிட்டது. மதிய உணவு இடைவேளைக்கு முன்னதாக மாநிலங்களவை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அவையில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

“திரிணாமுல் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் ஆலோசனை மேற்கொள்ளவே விரும்புகிறது. நாங்கள் பாராளுமன்றம் செயல்பட வேண்டும் மத்திய அரசு அதன் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் அவையின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு தன்னுடைய தமிழக கூட்டணியை நிறுத்தியுள்ளது,” என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஒ பிரையன் கூறியுள்ளார். 

பா.ஜனதாவின் கூட்டணி என்று கூறியுள்ளாரே தவிர, எந்த கட்சியென்று குறிப்பிடவில்லை. காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவும், அதிமுகவும் கடும் அமளியை ஏற்படுத்தியது. காங்கிரஸ், தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகளும் அமளி ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவையில் இருந்து 26 அதிமுக எம்.பிக்கள் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம்
அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக மக்களவையில் இருந்து 26 அதிமுக எம்.பிக்கள் 5 அமர்வுகளுக்கு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
2. ரபேல் ஒப்பந்த விவாதத்தின் போது ஜெட்லியை நோக்கி பறந்த பேப்பர் விமானங்கள்!
ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தின் போது ஜெட்லியை நோக்கி பேப்பர் விமானங்கள் பறந்தது.
3. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த 10–ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டம்
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் விதமாக 10–ந் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
4. வளர்ச்சி பணிகள் குறித்து நீலகிரி மாவட்டத்தில் பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழு ஆய்வு செய்தது.
5. பாராளுமன்றத்தும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல், விரைவில் மசோதா - பாரதீய ஜனதா தலைவர்
பாராளுமன்றத்தும் சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் விரைவில் மசோதா தயார் செய்யப்படும் என பா.ஜனதா தலைவர் கூறியுள்ளார்.