டெலிவரி செய்யும் முன் வாடிக்கையாளர்களின் உணவை சுவைத்த ஊழியர்: வேலை இழந்த பரிதாபம்


டெலிவரி செய்யும் முன் வாடிக்கையாளர்களின் உணவை சுவைத்த  ஊழியர்:  வேலை இழந்த பரிதாபம்
x
தினத்தந்தி 12 Dec 2018 3:21 PM GMT (Updated: 12 Dec 2018 3:21 PM GMT)

டெல்லியில் டெலிவரி செய்யும் முன் வாடிக்கையாளர்களின் சாப்பாட்டை சாப்பிட்ட ஸொமாட்டோ ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

புதுடெல்லி,

ஆன்லைனில் மூலம் உணவை வீட்டுக்கே கொண்டு வர ஏராளமான நிறுவனங்கள் ஊழியர்களை நியமித்துள்ளது.  அவைகளுள் ஸொமாட்டோவும் ஸ்விக்கியும் பிரபல நிறுவனங்களாகும்.

இந்நிலையில் உணவை டெலிவரி செய்ய புறப்பட்ட ஸொமாட்டோ ஊழியர் ஒருவர் நடு ரோட்டின் ஓரம் நின்று கொண்டு ஒவ்வொரு பாக்கெட்டாக உணவை சுவைத்துவிட்டு பின்னர் எடுத்தது தெரியாமல் இருக்க தில்லாங்கடி வேலைகளை உணவு பொட்டலத்தில் செய்கிறார். பின்னர் இன்னொரு பார்சலை எடுத்து சுவைக்கிறார்.

அதிலும் வாடிக்கையாளருக்கு வழங்குவதற்காக கொடுக்கப்பட்ட ஸ்பூனை நாக்கால் துழவி துழவி சாப்பிடுகிறார். இதுபோல் ஒவ்வொரு பார்சலாக அவர் எடுத்து சுவைத்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகிவிடுகிறது.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதையடுத்து ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்வோர் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.  இதையடுத்து அந்த ஊழியர் உடனடியாக பணி நீக்கம் செய்து ஸொமாட்டோ நிறுவனம் உத்தரவிட்டது. 

Next Story