ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை இன்றும் தொடர்கிறது


ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் இறுதி விசாரணை இன்றும் தொடர்கிறது
x
தினத்தந்தி 12 Dec 2018 11:21 PM GMT (Updated: 12 Dec 2018 11:21 PM GMT)

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதிநீக்கம் கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 5–ந்தேதி நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் தொடங்கியது.

புதுடெல்லி, 

தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கத்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஆகியவை மீதான இறுதி விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 5–ந்தேதி நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூ‌ஷண், எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அமர்வில் தொடங்கியது.

இதில் தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் தன்னுடைய வாதங்களை முன்வைத்தார். அவரை தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கத்தமிழ்ச்செல்வன் தரப்பில் மூத்த வக்கீல் அபிஷேக் மனுசிங்வி வாதங்களை முன்வைத்தார். இவர்களை தொடர்ந்து வெற்றிவேல் தரப்பில் மூத்த வக்கீல் அமரேந்திர சரண், முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆகியோர் நேற்று தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.

இது தொடர்பான வாதம் இன்றும் (வியாழக்கிழமை) தொடர்ந்து நடைபெற உள்ளது.


Next Story