தேசிய செய்திகள்

முதல்வர் யார்? ராஜஸ்தானில் போராட்டம் வெடிப்பு; தொண்டர்கள் அமைதியாக இருக்க சச்சின் பைலட் கோரிக்கை + "||" + Sachin Pilot Appeals to Supporters to Maintain Peace

முதல்வர் யார்? ராஜஸ்தானில் போராட்டம் வெடிப்பு; தொண்டர்கள் அமைதியாக இருக்க சச்சின் பைலட் கோரிக்கை

முதல்வர் யார்? ராஜஸ்தானில் போராட்டம் வெடிப்பு; தொண்டர்கள் அமைதியாக இருக்க சச்சின் பைலட் கோரிக்கை
சச்சின் பைலட்டை முதல்வராக்க வேண்டும் என்று அவருடைய தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சி செய்து வந்த ராஜஸ்தான் (வசுந்தரா ராஜே சிந்தியா), மத்திய பிரதேசம் (சிவராஜ் சவுகான்), சத்தீஷ்கார் (ராமன் சிங்) ஆகிய 3 மாநிலங்களிலும், ஆட்சியை தக்க வைக்க தவறியது. அங்கு காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. ஆட்சி அமைப்பதில் அந்தக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் ஆகிய இருவரிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முதல்வரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 2013 தேர்தலின் போது அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் இடையிலான பிளவே காங்கிரஸ் ஆட்சியை இழக்க நேரிட்டது என கூறப்பட்டது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸின் செயல்பாடு அதிகரிக்கவும், கர்நாடகாவில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவும் முக்கிய பணிகளை அசோக் கெலாட் மேற்கொண்டார். கட்சியின் தலைமை வழங்கிய பணிகளை மேற்கொண்டு வந்தார்.  

இதற்கிடையே ராஜஸ்தானில் காங்கிரஸை பலப்படுத்தும் பணியில் சச்சின் பைலட் தீவிரம் காட்டினார். இதற்காக இடைவிடாது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொண்டார். அவருடைய பணி வெற்றியில் முக்கிய இடம்பெற்றுள்ளது.
 
இந்நிலையில் இருவரில் யார்? என தேர்வு செய்வது கட்சி தலைமைக்கு பெரும் சவால்தான். இதற்கிடையே சச்சின் பைலட்டை முதல்வராகிவிட்டு, அசோக் கெலாட்டை கட்சியை மேலும் பலப்படுத்த  பயன்படுத்த வேண்டும் என்ற கருத்துக்களும் எழுகிறது. இருவரும் போட்டியில் ஸ்திரமாக இருக்கும் நிலையில் தொண்டர்களின் நிலைப்பாட்டையும் காங்கிரஸ் கேட்டு வருகிறது.  இதற்கிடையே சச்சின் பைலட்டுக்கு ஆதரவாக அவருடைய தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சாலை மறியல் மற்றும் டையர்கள் தீ வைத்து எரிப்பு போன்ற சம்பவங்கள் அங்கு ஏற்பட்டுள்ளது. விவகாரத்தில் மேலும் நீட்டிப்பது நிலையை மேலும் மோசமாக்கும் எனவும் கூறப்படுகிறது. சச்சின் பைலட் மற்றும் அசோக் கெலாட் தலைமையிடம் பேச டெல்லி சென்றுள்ளனர்.

போராட்டம் தொடர்பான தகவல்கள் வெளியானதும் அமைதிகாக்க சச்சின் பைலட் கோரிக்கை விடுத்துள்ளார். 

“கட்சியின் தலைமையின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் முடிவை வரவேற்போம். தொண்டர்கள் அமைதியாக இருக்க வேண்டும்,” என கோரிக்கை விடுத்துள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

1. போபாலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா களமிறக்கம்
போபாலில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கிற்கு எதிராக சாத்வி பிரக்யா பா.ஜனதா சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.
2. வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழப்பு
வடமாநிலங்களில் புழுதிப் புயலுடன் பெய்த மழைக்கு 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
3. காங்கேயம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
காங்கேயம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.
4. கரூரில் அதிமுக - திமுக இடையே மோதலால் பதற்றம்! போலீஸ் குவிப்பு
கரூர் வெங்கமேடு பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தின்போது திமுக - அதிமுகவினர் இடையே மோதல் வெடித்துள்ளது.
5. குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்ல எதிர்ப்பு: நிலஅளவீடுக்கு வந்த ஊழியர்கள் 2 பேர் சிறைபிடிப்பு காங்கேயம் அருகே பரபரப்பு
காங்கேயம் அருகே குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நிலஅளவீடுக்கு வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேரை விவசாயிகள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.