தேசிய செய்திகள்

மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக 17 ஆம் தேதி பதவியேற்கிறார் கமல்நாத் + "||" + Kamal Nath will take oath as Madhya Pradesh Chief Minister on December 17 at Lal Parade Ground in Bhopal

மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக 17 ஆம் தேதி பதவியேற்கிறார் கமல்நாத்

மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக 17 ஆம் தேதி பதவியேற்கிறார் கமல்நாத்
மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரியாக கமல்நாத் 17 ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
போபால், 

மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சி சமாஜ்வாடி மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறது.

புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்காக காங்கிரஸ் எம.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலில் நடந்தது. கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, திக்விஜய்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மத்திய பிரதேச மாநில புதிய முதல்-மந்திரியாக முறைப்படி முன்னாள் மத்திய மந்திரி கமல்நாத் தேர்வு செய்யப்பட்டார். அவர் வரும் 17 ஆம் தேதி (திங்கள் கிழமை) பதவியேற்க உள்ளார். போபாலில் உள்ள லால் பராட் மைதானத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய பிரதேச மாநில ஐகோர்ட்டில் தீ விபத்து
மத்திய பிரதேச மாநிலம் ஜாபல்பூரில் உள்ள ஐகோர்ட்டில் தீ விபத்து நேரிட்டுள்ளது.
2. மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் தந்தை மரணம்
மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகானின் தந்தை உடல் நல குறைவால் இன்று மரணம் அடைந்தார்.
3. வீட்டுப்பாடம் செய்யாத மாணவிக்கு கன்னத்தில் 168 அறை-ஆசிரியர் கைது
மத்தியபிரதேசத்தில், மாணவியை 168 முறை கன்னத்தில் அறைய செய்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
4. பானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவுக்கு ரூ.10 கோடி முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு
ஒடிசாவின் பல்வேறு பகுதிகள் கடும் பாதிப்புக்குள்ளாகின. மேலும் 29 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் கடும் சேதம் அடைந்தன.
5. காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் ஆசிரியர் உயிரிழப்பு, போலீஸ் விசாரணை
காஷ்மீரில் தேசிய புலனாய்வு பிரிவு காவலில் ஆசிரியர் உயிரிழந்தது தொடர்பாக போலீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...