பேஸ்மேக்கர் கருவி வெளியே வந்ததால் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிருக்கு போராடும் பெண்


பேஸ்மேக்கர் கருவி வெளியே வந்ததால் மருத்துவ உதவி கிடைக்காமல் உயிருக்கு போராடும் பெண்
x
தினத்தந்தி 14 Dec 2018 6:46 AM GMT (Updated: 14 Dec 2018 7:05 AM GMT)

உயிருக்கு போராடும் 62 வயது பெண் ஒருவர் பேஸ்மேக்கர் கருவி வெளியே வந்ததால் மருத்துவ உதவி கிடைக்காமல் தவித்து வருகிறார்.

புதுடெல்லி

உத்தரபிரதேச மாநிலம்  எடாவா மாவட்டம்  சைபை கிராமத்தை சேர்ந்தவர் ரோலி சோம்பன்ஷி  (வயது 62). கடந்த ஆண்டு தான் அவருக்கு இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டது. கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் அவரது கணவர் மரணமடைந்தார். அதில் இருந்து ரோலிக்கு நெஞ்சுவலி இருந்து வந்தது. பேஸ்மேக்கர் சாதனம்  அவரது தோலை கிழித்து விட்டதால் வலியை ஏற்படுத்தியது மற்றும் அவரது மார்பில் இருந்து விழத் தொடங்கியது. இதற்கான சிகிச்சைக்காக  ரோலி டெல்லி வந்தார். ஆனால் அவர் இரண்டு மருத்துவமனைகளுக்கு சென்றும் அவருக்கு  மருத்துவ உதவி எதுவும் கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பேஸ்மேக்கர்  பொருத்தப்பட்டது. பத்து மாதங்களுக்குப் பிறகு, பேஸ்மேக்கரில் இந்த ஆண்டு ஜூலையில் நோய்தொற்று ஏற்படத் தொடங்கியது. மே மாதம் கணவர் மரணமடைந்ததை தொடர்ந்து  மேலும் அவர் வேதனைக்கு உள்ளானார். குடும்பத்தில் அவரது கணவர்  மட்டுமே சம்பாதிப்பவராக இருந்தார் மற்றும் அவரது முதல் அறுவை சிகிச்சையின் போது அவருக்கு உதவியாக இருந்தார்.

பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் சிகிச்சை பெற முதலில் ரோலி கிழக்கு கைலாஷ் தேசிய இதய நிறுவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால்  காரணமில்லாமல் படுக்கைகள் இல்லை என  மறுத்துவிட்டார்கள். பின்னர் அவர் அரசு புவனேஸ்  கோவிந்த் பலாப் பன்ட் மருத்துவமனையின் பேஸ்மேக்கர் புறநோயாளி பிரிவுக்கு  கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கும் படுக்கை இல்லை என்று மறுத்து உள்ளனர். மற்றும் முதல் பேஸ்மேக்கர் இந்த மருத்துவமனையில் பொருத்தப்படவில்லை என கூறி உள்ளனர். தற்போது அவர் உதவி எதுவும் கிடைக்காமல் தவித்து வருகிறார்.

Next Story