ராஜஸ்தான், ம.பி. மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு


ராஜஸ்தான், ம.பி. மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Dec 2018 4:49 PM GMT (Updated: 14 Dec 2018 4:49 PM GMT)

ராஜஸ்தான், ம.பி. மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி,

சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தல்களில் தெலுங்கானாவில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றது. சத்தீஷ்காரில் அமோக வெற்றி பெற்று பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய காங்கிரசுக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற போதிலும் தனிப்பட்ட முறையில் அதிக இடங்கள் கிடைத்தன.

இந்நிலையில்,  மத்திய பிரதேசத்தின் 18-வது முதல்-மந்திரியாக 17-ந்தேதி  கமல்நாத் பதவியேற்றுக்கொள்கிறார். தலைநகர் போபாலில் உள்ள லால் அணிவகுப்பு மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

ராஜஸ்தான் முதல்-மந்திரியாக அசோக் கெலாட்டும், துணை முதல்-மந்திரியாக சச்சின் பைலட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில்,  ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரிகள் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார். டிச.17-ந் தேதி காலை 10 மணிக்கு ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி, துணை முதல்-மந்திரி பதவியேற்பு விழாவும் பிற்பகல் 1.30 மணிக்கு மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது.

Next Story