தேசிய செய்திகள்

மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியை தந்தையை போல் நழுவ விட்ட ஜோதிர்ஆதித்ய சிந்தியா + "||" + Madhya Pradesh's chief minister post Jithearathitha Cynthia that slipped like a father

மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியை தந்தையை போல் நழுவ விட்ட ஜோதிர்ஆதித்ய சிந்தியா

மத்தியபிரதேச முதல்-மந்திரி பதவியை தந்தையை போல் நழுவ விட்ட ஜோதிர்ஆதித்ய சிந்தியா
கடந்த 1989-ம் ஆண்டு, மத்தியபிரதேச காங்கிரஸ் முதல்-மந்திரியாக இருந்த அர்ஜூன் சிங், ஒரு ஊழல் புகாரில் பதவி விலகியபோது, மூத்த தலைவர் மாதவராவ் சிந்தியா முதல்-மந்திரி ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
போபால்,

டெல்லியில் இருந்து நம்பிக்கையுடன் மத்தியபிரதேசத்துக்கு வந்து 2 நாட்கள் முகாமிட்டார், சிந்தியா.

ஆனால், அவருக்கு பதவி அளிக்க அர்ஜூன் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை மறைத்து வைத்தார். இதனால், சிந்தியாவுக்கு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி, முதல்-மந்திரி பதவியை அளிக்கவில்லை. மோதிலால் வோராவை முதல்-மந்திரி ஆக்கினார்.


அதுபோல், 29 ஆண்டுகள் கடந்த நிலையில், மாதவராவ் சிந்தியாவின் மகன் ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கும் முதல்-மந்திரி பதவி, கடைசி நேரத்தில் கைநழுவிப் போனது.