சத்தீஷ்கரில் முதல் மந்திரி பதவியை பிடிக்க 4 பேர் இடையே கடும் போட்டி


சத்தீஷ்கரில் முதல் மந்திரி பதவியை பிடிக்க 4 பேர் இடையே கடும் போட்டி
x
தினத்தந்தி 16 Dec 2018 5:46 AM GMT (Updated: 16 Dec 2018 5:46 AM GMT)

சத்தீஷ்கர் மாநிலத்தில் முதல் மந்திரி பதவியை பிடிக்க 4 பேர் இடையே போட்டா போட்டி நிலவுகிறது.

ராய்பூர்,

நடந்து முடிந்த சத்தீஷ்கர்  சட்ட மன்ற  தேர்தலில், மொத்தமுள்ள 90 இடங்களில் 68 - ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருந்தாலும் அங்கு அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. 

மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பூபேஷ் பாகெலே, டி.எஸ் சிங் டியோ, தம்ராத்வாஜ் சிங், சரந்தாஸ் மஹந்த் ஆகியோர் முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர். முன்னதாக, நேற்று மேற்கூறிய 4 பேருடனும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். 

மல்லிகார்ஜூன கார்கே மற்றும் பி.எல் புனியா ஆகியோர் ராய்பூருக்கு இன்று காலை வருகை தந்தனர். இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு பிறகு முதல் மந்திரி பெயர் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

Next Story