சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்வு


சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்வு
x
தினத்தந்தி 16 Dec 2018 8:59 AM GMT (Updated: 16 Dec 2018 8:59 AM GMT)

சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்வு செய்யப்பட்டார்.


ராய்பூர்,


சத்தீஷ்கார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் 68 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து முதல்வர் யார்? என்பது தொடர்பாக தொடர்ச்சியாக ஆலோசனை நடைபெற்றது. ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலங்களில் முதல்வர் போட்டியில் இரு தலைவர்கள் இருந்த நிலையில், சத்தீஷ்காரில் நான்கு தலைவர்கள் கை உயர்த்தியதால் தலைமைக்கு பெரும் நெருக்கடினான சூழ்நிலை நிலவியது. 

காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற்ற போது, ராகுல் காந்திதான் முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சத்தீஷ்கார் மாநில காங்கிரஸ் தலைவராக இருக்கும் பூபேஷ் பாகெலே, டி.எஸ் சிங் டியோ, தம்ராத்வாஜ் சிங், சரந்தாஸ் மஹந்த் ஆகியோர் முதல் மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியது. இவர்களில் யார் முதல்வர் என்பது தொடர்பாக 5 நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேற்கூறிய 4 பேருடனும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி  ஆலோசனை நடத்தினார். இப்போது 5 நாட்கள் ஆன பின்னர் முதல்வர் யார்? என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.  
சத்தீஷ்கார் மாநில புதிய முதல்வராக பூபேஷ் பாகெலே தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பூபேஷ் பாகெலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

Next Story