தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது - தமிழக பூசாரியை பிடிக்க தனிப்படை விரைந்தது + "||" + In Karnataka Offering the number of victims was 15 - TamilNadu Catch the priest individual force rushed

கர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது - தமிழக பூசாரியை பிடிக்க தனிப்படை விரைந்தது

கர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆனது - தமிழக பூசாரியை பிடிக்க தனிப்படை விரைந்தது
கர்நாடகாவில் பிரசாதம் சாப்பிட்டதில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. தமிழக பூசாரியை பிடிக்க தனிப்படை விரைந்தது.
பெங்களூரு,

கர்நாடகவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா கோவில் உள்ளது. இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கலச பூஜை நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு தக்காளி சாதம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


அந்த பிரசாதத்தை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 12 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானார்கள். வாந்தி, மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

அதில் நேற்று முன்தினம் நளினி என்ற பெண் பலியானார். இதைத்தொடர்ந்து நேற்று காலையில் மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவில் நிர்வாகி உள்பட 7 பேரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய கிருஷ்ணகிரியை சேர்ந்த காலப்பா என்ற பூசாரியை பிடிப்பதற்காக போலீசார் கிருஷ்ணகிரி விரைந்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது - மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
கர்நாடகத்தில் கூட்டணி அரசு கவிழாது என மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
2. கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகாவில் 23 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
3. கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியவில்லை - கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி
கர்நாடகாவில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்களால் நீட் தேர்வு எழுத முடியாமல் போனது என்று கர்நாடகா முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Karnataka #HDKumaraswamy
4. 8 மாநிலங்களில் பயங்கரவாத தாக்குதல், ஏமாற்று அழைப்பு விடுத்தவர் கைது
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என்று பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஏமாற்று அழைப்பை விடுத்தவரை போலீஸ் கைது செய்தது.
5. கர்நாடகா-கோவா மாநில எல்லையில் வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல்
கர்நாடகா-கோவா மாநில எல்லையில், வாகன சோதனையின் போது ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.