பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து


பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து
x
தினத்தந்தி 17 Dec 2018 4:07 AM GMT (Updated: 17 Dec 2018 4:08 AM GMT)

பெய்ட்டி புயல் காரணமாக ஆந்திராவில் 22 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காக்கி நாடா, 

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்று நகர தொடங்கி இருக்கிறது. இந்த ‘பெய்ட்டி’  புயல் காரணமாக  வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், வங்கக்கடல் பகுதி கொந்தளிப்புடன் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில், புயலின் வேகம் 16 கி.மீட்டரில் இருந்து 23 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அருகே 320 கி.மீட்டர் தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.  மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 160 கி.மீட்டர் தொலைவிலும், காக்கி நாடாவுக்கு தெற்கே 190 கி.மீட்டர் தொலைவிலும்  மையம் கொண்டுள்ளது.   புயலாக வலு குறைந்து பிற்பகல் காக்கி நாடா கடற்கரை அருகே கரையைக்கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.  கரையைக்கடக்கும் போது 70- 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பெய்ட்டி புயல் காரணமாக 22 பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

Next Story