தேசிய செய்திகள்

ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து + "||" + PM Modi congratulates Gehlot, Pilot

ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து

ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்து
ராஜஸ்தான் மாநில முதல் மந்திரி அசோக் கெலாட்டிற்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி, 

ராஜஸ்தான் மாநில முதல் மந்திரியாக அசோக் கெலாட் மற்றும் துணை முதல் மந்திரியாக சச்சின் பைலட் ஆகிய இருவரும் இன்று காலை  பதவியேற்றுக் கொண்டனர்.  முதல் மந்திரி அசோக் கெலாட் மற்றும் துணை முதல் மந்திரி சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- “ அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் பதவிக்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.