மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் அறிவிப்பு


மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Dec 2018 11:33 AM GMT (Updated: 17 Dec 2018 11:33 AM GMT)

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்து முதல்வர் கமல்நாத் முதல் அறிவிப்பை வெளியிட்டார்.

போபால், 

சமீபத்தில் நடந்த மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில், மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் 114 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் சுயேச்சைகள் என மேலும் 7 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 13–ந் தேதி, காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தேர்தல் பிரசாரத்தின் போது விவசாயிகள் பிரச்சனைக்கு காங்கிரஸ் முன்னுரிமை கொடுத்தது. 

மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி மற்றும் விளைப்பொருட்களுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலை உயர்வு போன்ற முக்கிய அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டது. ஆட்சியில் அமர்ந்ததும் முதலாவதாக விவசாய  கடன் தள்ளுபடி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். அதன்படி நடவடிக்கையை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு எடுத்துள்ளது. புதிய முதல்வராக பதவியேற்ற கமல்நாத் விவசாய கடன் தள்ளுபடிக்கான கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். 

Next Story