நாடாளுமன்றத்தில் நிறைவேறியது திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் - பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் 2 ஆண்டு ஜெயில்


நாடாளுமன்றத்தில் நிறைவேறியது திருநங்கைகள் பாதுகாப்பு சட்டம் - பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் 2 ஆண்டு ஜெயில்
x
தினத்தந்தி 17 Dec 2018 9:30 PM GMT (Updated: 17 Dec 2018 7:36 PM GMT)

நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் பாதுகாப்பு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் நேற்று சமூகநீதி மற்றும் நலத்துறை மந்திரி தாவர்சந்த் கெலாட், ‘திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம்-2016’ என்ற சட்டமசோதாவை அறிமுகம் செய்து பேசினார். அவர் கூறும்போது, “திருநங்கைகளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி போன்றவை வழங்கவும், மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கான நல்வாழ்வு திட்டங்களை நிறைவேற்றவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது. அவர்களை பிச்சை எடுக்க கட்டாயப்படுத்தினாலோ, பொதுஇடங்களில் அனுமதிக்க மறுத்தாலோ, உடல்ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ தாக்குதல் நடத்தினாலோ அந்த நபர்களுக்கு 2 ஆண்டு ஜெயில் மற்றும் அபராதம் விதிக்க வழிவகுக்கப்பட்டுள்ளது” என்றார்.

2016-ம் ஆண்டு மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா இதுதொடர்பாக கொண்டுவந்த தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் அதே ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் நிலைக்குழுவின் 27 ஆலோசனைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திருநங்கைகளை வகைப்படுத்தவில்லை என்பது உள்பட சில எம்.பி.க்களின் ஆட்சேபனைகளுக்கு இடையே இந்த சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது.

Next Story