பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பாஜக வழங்கவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் - மஹ்பூபா


பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பாஜக வழங்கவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் -  மஹ்பூபா
x
தினத்தந்தி 18 Dec 2018 8:09 AM GMT (Updated: 18 Dec 2018 8:09 AM GMT)

பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை பாஜக வழங்கவில்லை, கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள் என காஷ்மீர் மாநில முன்னாள் முதல் மந்திரி மஹ்பூபா முஃப்தி கூறி உள்ளார்.

புதுடெல்லி

காஷ்மீர் மாநில  முன்னாள் முதல் மந்திரி மஹ்பூபா முஃப்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை இந்தியா மேற்கொள்வதற்கான சிறந்த நேரம் இது.  அண்டை நாடான  பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானை, அந்நாட்டின் ராணுவ பினாமி என கூறி வருகின்றனர்.

இந்த நேரத்தில் இரு அண்டை நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை இப்போது ஆரம்பிக்கப்பட்டால்,  "நன்மை பயக்கும்" என்று நிரூபிக்க முடியும். பாகிஸ்தான் ராணுவத்தின் பினாமி இம்ரான்கான் என்றால்  பேச்சுவார்த்தை ஆரம்பிக்க இது நல்ல நேரமாகும். இம்ரான் கான் பேசுவதற்கு தயாராக உள்ளார்.  அவர்கள்  இராணுவம் அதே  எண்னத்தில் தான்  உள்ளது என்று நினைக்கிறேன். பேச்சுவார்த்தை இப்போது பயனுள்ளதாக இருக்கும் .... ஏன் நாம் பேசக்கூடாது? 

ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சினையின் தீர்மானத்தை ஆதரிக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தனது கட்சி கூட்டு சேர தயாராக உள்ளது. "பாஜகவுடன்  கைகோர்த்துச் செல்ல முடியுமானால், நாங்கள் காஷ்மீர் தீர்மானத்திற்கு எவருடனும் இதைச் செய்யலாம்.

மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி) பாஜகவுடன்  இணைந்து ஆட்சியில் அமர்ந்தது ஒரு தற்கொலை முடிவு ஆகும். மாநிலத்தில் அரசியல் நடைமுறையைத் தொடங்க இந்த பரிசோதனை முயற்சி வேலை செய்யவில்லை. ஏமாற்றமடைந்ததாக கூறினார்.

முன்னாள் பிரதமர்  அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சிக்கும், பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய ஆட்சிக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.

கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள், பசுக்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அவர்கள் வழங்கவில்லை" என்று  பிஜேபி மீது ஒரு வெளிப்படையான குற்றச்சாட்டை கூறினார்.

Next Story