விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம்: ராகுல் காந்தி


விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம்: ராகுல் காந்தி
x
தினத்தந்தி 18 Dec 2018 8:18 AM GMT (Updated: 18 Dec 2018 8:18 AM GMT)

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை தூங்க விட மாட்டோம் என்று ராகுல் காந்தி கூறினார்.

புதுடெல்லி,

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- “ விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் வரை பிரதமர் மோடியை நாங்கள் தூங்க விட மாட்டோம். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையாக கடன் தள்ளுபடியை கோருகின்றன. தற்போது வரை விவசாயிகளின் ஒரு பைசாவை கூட மோடி தள்ளுபடி செய்யவில்லை.  2 மாநிலங்களில் பதவியேற்றவுடன் முதல் அமைச்சர் விவசாயக்  கடன்களை தள்ளுபடி செய்துள்ளனர். 3-வது மாநிலத்திலும் விவசாயக்கடன்கள் விரைவில் தள்ளுபடி செய்யப்படும். 

15 பெரு முதலாளிகளின் 3.5 லட்சம் கோடி கடனைத்தான் பிரதமர் மோடி தள்ளுபடி செய்தார். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை. மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். விவசாயிகளும், சிறு வணிகர்களும் கொள்ளையடிக்கப்படுகின்றனர். உலகின் மிகப்பெரிய ஊழல் பணமதிப்பிழப்புதான்” என்றார். 

1984 ஆம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சஜ்ஜான் குமார் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது பற்றி ராகுல் காந்தியிடம் கேட்ட போது, கலவர விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை நான் தெளிவாக ஏற்கனவே கூறியிருக்கிறேன். நாட்டில் உள்ள விவசாயிகள் பற்றிய செய்தியாளர் சந்திப்பு இது” என கூறினார். 


Next Story