பாரதீய ஜனதா கட்சியின் ஆண்டு வருமானம் ரூ.1027 கோடி, செலவு ரூ.758 கோடி


பாரதீய ஜனதா கட்சியின் ஆண்டு வருமானம்  ரூ.1027 கோடி, செலவு ரூ.758 கோடி
x
தினத்தந்தி 18 Dec 2018 8:31 AM GMT (Updated: 18 Dec 2018 8:31 AM GMT)

பாரதீய ஜனதா கட்சியின் ஆண்டு வருமானம் ரூ.1027 கோடி என்றும் செலவு ரூ.758 கோடி என்றும் தேர்தல் ஆணையத்தில் கட்சியின் சார்பில் கூறப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

அரசியல் கட்சிகளின் வருமானம் குறித்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான தேர்தல் கண்காணிப்புக் குழு (ADR) அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில் கூறி இருப்பதாவது:-

மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கு  2017-2018 ஆம் ஆண்டில் ரூ1027. 339 கோடி  வருமானம் வந்ததாகவும் அதில் ரூ.758.47  கோடி செலவு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறி உள்ளது. பாஜக  வருமானத்தை  2016-17 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட மொத்த வருமானம் 1,034.27 கோடி ரூபாயுடன் ஒப்பிடும்போது ரூ. 7 கோடி குறைந்துள்ளது.

காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில்  தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை  இன்னும் சமர்ப்பிக்கவில்லை. 2016-17ல் ரூ. 225.36 கோடியை வருமானமாக காங்கிரஸ் காட்டி இருந்தது.

மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் வருமானம் (CPI-M ) 104.847 கோடி ரூபாயாகும். செலவு  ரூ. 83.482 கோடியாகும்.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் மொத்த வருமானம் ரூ.51.694 கோடியாகும். செலவு  ரூ.14.78 கோடியாகும்.

சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஆண்டு வருமானம் ரூ.8.15 கோடியாகும். ஆனால்  செலவும் ரூ.8.84 கோடியாக காட்டப்பட்டு உள்ளது. வருமானத்திற்கும் கூடுதலாக  ரூ.69 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.

ரூ. 5.167 கோடி மொத்த வருமானம் என  திரிணமுல் காங்கிரஸ் கணக்கு காட்டி உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மொத்த வருவாய் ரூ. 1.55 கோடியாக  கணக்கு காட்டப்பட்டு உள்ளது.  

அரசியல் கட்சிகளின் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் அக்டோபர் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய தேதி ஆகும் .

Next Story