தேசிய செய்திகள்

“வட இந்தியர்களின் வருகையால் வேலைவாய்ப்பு பாதிப்பு” கமல்நாத் பேச்சால் சர்ச்சை, அகிலேஷ் அப்செட்! + "||" + Kamal Naths Comment On UP Bihar Migrants And Jobs Upsets Akhilesh Yadav

“வட இந்தியர்களின் வருகையால் வேலைவாய்ப்பு பாதிப்பு” கமல்நாத் பேச்சால் சர்ச்சை, அகிலேஷ் அப்செட்!

“வட இந்தியர்களின் வருகையால் வேலைவாய்ப்பு பாதிப்பு” கமல்நாத் பேச்சால் சர்ச்சை, அகிலேஷ் அப்செட்!
வட இந்தியர்களின் வருகையால் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பேசியது சர்ச்சையாகியுள்ளது.
மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள கமல்நாத் வேலைவாய்ப்பு தொடர்பாக தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார், உத்தர பிரதேசம் மாநிலங்களிலிருந்து அதிக அளவு தொழிலாளர்கள் வேலை தேடி மத்திய பிரதேசம் வருவதால், உள்ளூர் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார். அவருடைய இப்பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமான தொழிற்சாலைகள் உத்தரபிரதேசம், பீகார் போன்ற பிற மாநிலங்களில் இருந்து வேலைக்கு ஆள் எடுக்கிறது. அவர்களை நான் விமர்சனம் செய்யவில்லை. மத்திய பிரதேச மாநில இளைஞர்கள் வேலையின்றி உள்ளார்கள் என கூறியுள்ளார். 
 
 இது மிகவும் துரதிஷ்டவசமானது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். 

சமாஜ்வாடி தலைவரும், உ.பி. முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் பேசுகையில், இது மிகவும் தவறானது. மராட்டியம், டெல்லியை அடுத்து மத்திய பிரதேசத்தில் இதுபோன்ற குரல் எழுந்துள்ளது.  வடஇந்தியர்கள் வெளியேறுவதாக முடிவு செய்து விட்டால் யார்தான் அங்கு வருவார்கள்? என்று கேள்வியை எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக ராகுலிடம் கேட்கையில், கமல்நாத் கருத்தை பார்க்கவும் இல்லை, கேட்கவும் இல்லையென்று தெரிவித்துள்ளார். கமல்நாத் பேச்சுக்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க சமாஜ்வாடியும் காங்கிரசுக்கு ஆதரவளித்துள்ளது. கூட்டணி கட்சியும் இப்போது அப்செட் ஆகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புதிய டெண்டரில் 600 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை
புதிய டெண்டரில் 600 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காததால், அவற்றின் உரிமையாளர்கள் நாமக்கல்லில் உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந் தேதி நடக்கிறது
மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில் வணிக சங்கம் சார்பில் ஈரோட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
3. தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
4. பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்
பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குமதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்.
5. பீகார் அமைச்சரவை விஸ்தரிப்பு, பா.ஜனதாவிற்கு இடம் வழங்கப்படவில்லை
பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.