தேசிய செய்திகள்

150-வது பிறந்தநாளையொட்டி ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு + "||" + Opening Gandhi statue in Germany with the 150th birthday

150-வது பிறந்தநாளையொட்டி ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு

150-வது பிறந்தநாளையொட்டி ஜெர்மனியில் காந்தி சிலை திறப்பு
150-வது பிறந்தநாளையொட்டி ஜெர்மனியில் காந்தி சிலை திறக்கப்பட்டுள்ளது.
பெர்லின்,

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த நாள் விழா இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி ஜெர்மனியில் உள்ள டிரையர் நகரில் உள்ள ஆங்குஸ்டா-விக்டோரியா என்ற பழமையான பள்ளிக்கூடத்தில் காந்தியின் மார்பளவு சிலை திறக்கப்பட்டு உள்ளது.


ஜெர்மனி நாட்டிற்கான இந்திய தூதர் முக்தா தத்தா தோமர் முன்னிலையில், டிரையர் மாநகர மேயர் ஒல்ப்ரம் லேபே சிலையை திறந்து வைத்தார். விழாவில் பங்கேற்ற முன்னாள் மேயர் கிளாஸ் ஜேன்சன், காந்தியின் தத்துவங்களை நினைவுகூர்ந்தார்.