2 பேர் பலியானதை மட்டுமே கவனிக்கிறீர்கள், 21 பசுக்கள் இறந்ததை கவனிக்கவில்லை: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு


2 பேர் பலியானதை மட்டுமே கவனிக்கிறீர்கள், 21 பசுக்கள் இறந்ததை கவனிக்கவில்லை: பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 21 Dec 2018 3:38 AM GMT (Updated: 21 Dec 2018 3:38 AM GMT)

2 பேர் பலியானதை மட்டுமே கவனிக்கிறீர்கள், 21 பசுக்கள் இறந்ததை யாரும் கண்டு கொள்வதில்லை என்று பாஜக எம்.எல்.ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வாரணாசி,

புலந்த்ஷெஹரின் சயானா கிராமத்தில் பசுவதையைக் கண்டித்து நடைபெற்ற கலவரத்தில் ஆய்வாளர் சுபோத் குமார் சிங் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர். பசுவதை தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும், இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளி எனக்கூறப்படும்  பஜ்ரங் தள் தலைவர் யோகேஷ் ராஜ்,  இன்னும் சுதந்திரமாக சுற்றி வருகிறார். தலைமறைவாக இருப்பதோடு அவ்வப்போது தான் குற்றமற்றவன் எனக்கூறி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.  

இந்த விவகாரம் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏவின் கருத்து, சர்ச்சைக்கு மேலும் தீனி போடும் வகையில் அமைந்துள்ளது. அனுப்ஷாஹர் தொகுதி எம்.எல்.ஏவான சஞ்செய் சர்மா இது குறித்து கூறும் போது, “  சுமித் மற்றும் போலீஸ் அதிகாரி கொலை செய்யப்பட்டதை மட்டுமே நீங்கள் கவனத்தில் கொள்கிறீர்கள், ஆனால், 21  பசுக்களின் இறப்பு பற்றி யாரும் அக்கறை கொள்வதில்லை. பசுக்களை கொன்றவர்களே உண்மையான குற்றவாளிகள் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். பசுக்கள் கொல்லப்பட்டதாலே, கும்பல் வன்முறை ஏற்பட்டது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

யோகி ஆதித்யநாத் அரசு, மக்களை விட பசுக்கள் மீதே அதிக அக்கறை காட்டுவதாக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக எம்.எல்.ஏவின் பேச்சு மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story