ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னாவை திரும்ப பெற டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது


ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னாவை திரும்ப பெற டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது
x
தினத்தந்தி 21 Dec 2018 4:17 PM GMT (Updated: 21 Dec 2018 4:17 PM GMT)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னாவை திரும்ப பெற வேண்டுமென டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது.

புதுடெல்லி,

சமீபத்திய டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யான சஜ்ஜன் குமார் மற்றும் பிற குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அதன்பின் அவர்கள் வழங்கிய பரிந்துரையில், இந்தியாவின் உள்ளூர் குற்ற சட்டங்களுக்குள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை உள்ளிட்ட குற்றங்களை சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்தனர்.

இந்த நிலையில், டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஜர்னைல் சிங் தீர்மானம் ஒன்றை இன்று கொண்டு வந்துள்ளார்.  அதில், நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளை டெல்லி அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் வலியுறுத்தி கூற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து சீக்கிய கலவரத்தில் இனப்படுகொலை நடத்தப்பட்டு உள்ளது.  இதனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு வழங்கிய பாரத ரத்னாவை திரும்ப பெற வேண்டுமென டெல்லி சட்டசபையில் தீர்மானம் நிறைவேறியது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சுட்டு கொல்லப்பட்ட பின்னர் கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த ராஜீவ் காந்திக்கு அவரது மறைவுக்கு பின் கடந்த 1991ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Next Story