ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் -இரண்டு ராணுவ அதிகாரிகள் வீரமரணம்


ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் -இரண்டு ராணுவ அதிகாரிகள் வீரமரணம்
x
தினத்தந்தி 21 Dec 2018 5:50 PM GMT (Updated: 21 Dec 2018 5:50 PM GMT)

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் வீரமரணம் அடைந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில், பாகிஸ்தான் படைகள் இன்று அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் வீர மரணம் அடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், குப்வாரா மாவட்டத்தை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் படைகள் இன்று பகல் சுமார் 12 மணியளவில் இந்திய நிலைகளின்மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக இந்திய வீரர்களும் எதிர்தாக்குதலில் ஈடுபட்டனர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ இளநிலை அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் ஒரு இளநிலை அதிகாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை இரண்டாக அதிகரித்தது.

இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் உயிரிழந்த இராணுவ அதிகாரிகளாக, ராமன் தாப்பா மற்றும் காமர் பகதூர் தாப்பா ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Next Story