ஐதராபாத்தில் போனில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்கு


ஐதராபாத்தில் போனில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 21 Dec 2018 7:01 PM GMT (Updated: 21 Dec 2018 7:01 PM GMT)

ஐதராபாத்தில் போனில் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் முகம்மது முசாம்மில் ஷெரீப், ஒரு பள்ளிக்கூட முதல்வராக உள்ளார். இவரது மனைவி போலீசில் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் எங்கள் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு மாதத்திலேயே வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தினர். 3 மாதம் முன்பு எனக்கு பெண் குழந்தை பிறந்ததும் துன்புறுத்தல் அதிகமானது. தாய் வீட்டுக்கு சென்ற என்னுடன் கணவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு முத்தலாக் கூறி விவாகரத்து செய்து விட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

போலீசார் ஷெரீப் மீது வழக்கு பதிவு செய்தனர். முத்தலாக் முறை சட்டப்படி குற்றம் என செப்டம்பர் மாதம் மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story