தேசிய செய்திகள்

முந்தைய மத்திய அரசுகள் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; பிரதமர் மோடி + "||" + Women's welfare was never priority of previous govts: PM

முந்தைய மத்திய அரசுகள் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; பிரதமர் மோடி

முந்தைய மத்திய அரசுகள் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை; பிரதமர் மோடி
முந்தைய மத்திய அரசுகள் பெண்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
காந்திநகர்,

குஜராத்தின் காந்திநகரில் நடந்த பாரதீய ஜனதா கட்சியின் 5வது தேசிய மகளிரணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.  அதில் அவர் பேசும்பொழுது, கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு வாய்ப்புகளை ஆய்வுசெய்த பின் நாட்டிலுள்ள பெண்கள் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைக்க தொடங்கியுள்ளனர்.

இதற்கு முன்பு ஆண்ட அரசுகள் பெண்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர கூட எதனையும் செய்யவில்லை.  பெண்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.  வாக்குறுதிகளையே அவர்கள் அளித்து வந்தனர்.  சமூகத்தில் சீர்திருத்தங்கள் மற்றும் மனநிலையில் மாற்றம் ஆகியவை வரும்வரை சரியான நேரத்திற்காக ஆட்சி செய்தவர்கள் காத்திருந்து உள்ளனர்.

கடந்த 4 வருடங்களில் பெண் குழந்தைகள் மற்றும் மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றில் சமூகத்தின் பார்வை நல்ல முறையில் மாறியுள்ளது.

முதன்முறையாக, அரசின் முக்கிய திட்டங்கள் பெண்களை கவனத்தில் கொண்டு உள்ளது.  தூய்மை இந்தியா திட்டம், உஜ்வாலா திட்டம், பெண்களை காப்போம் பெண்களுக்கு கல்வி அளிப்போம், பிரதமர் ஆவாஸ் யோஜனா ஆகிய திட்டங்கள் இதற்கு எடுத்துக்காட்டுகளாகும் என அவர் கூறினார்.

நாட்டில் ஆண் மற்றும் பெண் பாலின விகிதம் முன்னேற்றம் அடைந்துள்ளது.  பெண்களுக்காக 18 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் உள்ளன.  விமான படையில் போர் விமானிகளாக பெண்கள் உள்ளனர்.  கப்பற்படையில் மகளிர் குழு உள்ளது.  சிறுமிகள் கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தல்
தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
2. சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும்: பிரதமர் மோடி உறுதி
சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புகள் நிச்சயம் தண்டிக்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
3. பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுது
பிரதமர் மோடியால் நேற்று துவக்கி வைக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் பழுதாகி நின்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. டெல்லி - வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
டெல்லி - வாரணாசி இடையே வந்தேபாரத் விரைவு ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
5. மாபெரும் தவறை செய்து விட்டனர், மிகப்பெரும் விலையை கொடுப்பார்கள்; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை
புல்வமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மாபெரும் தவறை செய்து விட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.