வடமாநிலங்களில் கடும் குளிர் - மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்


வடமாநிலங்களில் கடும் குளிர் - மக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்
x
தினத்தந்தி 23 Dec 2018 9:45 PM GMT (Updated: 23 Dec 2018 7:28 PM GMT)

வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் தீ மூட்டி குளிர் காய்ந்தனர்.

புதுடெல்லி,

வடமாநிலங்களில் வழக்கத்தை விட தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. தலைநகர் டெல்லியில் நேற்று காலை 3.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவியது.

கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ந் தேதி 3.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. அதைவிட குறைவாக நேற்று 3.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 12 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வெப்பநிலை குறைவாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக மக்கள் அவதியடைந்தனர். டெல்லியில் பல இடங்களில் மக்கள் தீயை மூட்டி, குளிரில் இருந்து தங்களை காத்துக்கொண்டனர்.

குளிரின் கொடுமை பஞ்சாப், அரியானா மாநிலங்களையும் விட்டு வைக்கவில்லை. இரு மாநிலங்களிலும் கடந்த 10 நாட்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. பஞ்சாபில் உள்ள அதம்பூரில் வெப்பநிலை 1.5 டிகிரியாக இருந்தது. பதின்டா பகுதியிலும் 2.2 டிகிரி வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோல வடமாநிலங்கள் பலவற்றில் நேற்று கடும்குளிர் நிலவியது.


Next Story